Sunday, October 30, 2011

தீபாவளி அன்று பத்ரி சேஷாத்ரி college  of  engineering  கிண்டி இல்  பேசிய உரை கேட்டேன் .மொழி வளம் எவ்வளவு முக்கியம்  என்று புரிந்தது.

Friday, July 2, 2010

எனக்கு கிடைத்தது


தோழி போன்ற சகோதரிகள்
சகோதரி போன்ற தோழிகள்
இரண்டுமாக என் அம்மா

Sunday, June 20, 2010



"அத்தி முகத்து உத்தமனை நித்தம் நினை சித்தமே "


இந்த வரிகள் எந்த பாடலில் வருவது எனதெரியவில்லை . தெரிந்தவர் சொல்லுங்களேன் .

Thursday, June 3, 2010

பாடம் 2

எனக்கு என் சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும்.அவருடைய 40 வயதுகளில் அவர் குடி பழக்கத்திற்கு ஆளானார்.இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பழக்கம் தொடர்ந்து இருந்தது.ஒரு நாள் நான் என் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வரும் போது வழியில் பார்த்தேன். குடித்துவிட்டு ஆடி கொண்டு வரும் அவரை பார்த்தும் பார்க்காமல் வந்து விட்டேன். வீட்டிற்கு வந்து மனதே சரியில்லை.அன்று இரவு 1 மணிக்கு சித்தப்பா இறந்து விட்டதாக போன் வந்தது. நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆகி விட்டது.கடைசியாக ஒரு வார்த்தை பார்த்து பேசாமல் வந்து விட்டோமே ,அவர் என்னிடம் ஏதேனும் பேச நினைத்து இருப்பாரா?எனும் கேள்வி என்னை விடாமல் யோசிக்க வைக்கிறது.இறக்கும் போது ஒரு பாடம் கற்று கொடுத்து விட்டார்.அன்று முதல் யாருடன் பேச வேண்டும் என தோன்றினாலும் பேசி விட வேண்டும் என்றும்,நிலையில்லா இந்த வாழ்கையில் யார்க்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனும்போது யாருடனும் எதற்காகவும் பகைமை பாராட்டுவதும் நல்லதல்ல என்றும் புரிகிறது.இதனாலேயே இப்போதெல்லாம் எனக்கு நெருக்கமானவர்களுடன் கோபம் வந்தாலும் விட்டுகொடுத்து விட தோன்றுகிறது.

Wednesday, June 2, 2010

பாடம்

நேற்று ஸ்டெல்லா ப்ருசின் "அது ஒரு நிலா காலம்" படித்தேன். அதை படித்ததும் பிரகாஷ் ராஜ் " சொல்லாததும் உண்மை"யில் சொல்லி இருக்கும் "வார்த்தைகளில்
வாழ்க்கையை தொலைத்தவர்கள் வானத்து நட்சத்திரத்தை விட அதிகம்" எனும் வரிகள் தான் ஞாபகம் வந்தது.இனியாவது நாமாவது வார்த்தைகளால் வாழ்கையை தொலைக்காமல் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

Tuesday, June 1, 2010

எனக்கு பிடித்த பத்து பேர்

dr.ஷாலினி
dr.ருத்ரன்
ஞானி
பாலகுமாரன்
சுஜாதா
சோம வள்ளியப்பன்
ப.சிதம்பரம்
திருபாய் .அம்பானி
குஷ்பூ
ஹாய் மதன்

நன்றி

இது என் முதல் பதிவு . இதற்குயேன் நன்றி என தலைப்பு தெரியுமா? என் விருப்பதை அறிந்து எனக்கு ஒரு ப்ளாக் create பண்ணி தந்த என் வாழ்க்கை துணைக்கு முதலில் நன்றி சொல்ல தான்.
THANKYOU B.K.